இடைக்காட்டூர் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
மானாமதுரை, செப். 27: இடைக்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவங்கி நடைபெற்று வருகிறது. மானாமதுரை இடைக்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவங்கியது. தலைமையாசிரியர் புவனேஸ்வரன் முன்னிலையில், திட்ட அலுவலர் ரவிசங்கர் மேற்பார்வையில் இடைக்காட்டூரில் 7 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் முகாம் வருகிற 1ம் தேதி நிறைவுபெறுகிறது. முகாமில் காலையில் கோயில் வளாகம், மசூதி, சர்ச் சுத்தம் செய்தல் போன்ற தூய்மை பணிகள் நடைபெறுகின்றன. மாலை நேரங்களில் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு, மழைநீர் சேகரிப்பு, சைபர் குற்றங்கள் போன்றவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்கள் சார்பில் பேரணி நடைபெறுகிறது.
Advertisement
Advertisement