நவராத்திரி விழா
திருப்புத்தூர், செப். 27: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளியில் நேற்று நவராத்திரி கலை விழா நடைபெற்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் கொலு பொம்மைகள் 9 படிகளாக அடுக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்றது. நேற்று கொலு பொம்மைகளுக்கு தீர்த்த கலசங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு பள்ளி மாணவி ஷிவானி குத்துவிளக்கேற்ற நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து குழந்தைகளின் பரதநாட்டியம், ஆன்மீகப்பாடல்கள், நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
Advertisement