விவேகானந்தா கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
காரைக்குடி, அக்.26: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நிகில் பவுண்டேசன் சார்பில் வாழ்க்கை திறன் பயிற்சி முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் சசிகுமார் வரவேற்றார். கல்விகுழும தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், விவேகானந்தா கல்வி குழுமத்தின் சார்பில் மாணவர்களின் திறன்களை வளர்க்கவும், அவர்கள் படித்து முடித்து நேர்காணலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் எதிர்கால கனவுகளை நினைவாக்க கூடிய வகையில் அவர்களை உருவாக்கி வருகிறோம். ஒவ்வொரு மாணவர்களிடமும் திறமைகள் உள்ளது. அதனை வெளிக்கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். நம்மால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் சாதிக்க பிறந்தவர்கள். உங்களது குறிக்கோளை அடைய தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றியடைய முடியும் என்றார். நிகில் பவுண்டேசன் நிறுவனர் நாகலிங்கம் சிறப்புரையாற்றினார். முகாமில் சுயதொழில் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்வியின் முக்கியத்தும் குறித்து விளக்கப்பட்டது.