காளையார்கோவிலில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை
காளையார்கோவில், அக்.26: காளையார்கோவிலில் சுதந்திரப் போராட்ட தியாகி மருது பாண்டியர்கள் குருபூஜை நாளை நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், சிவகங்கை மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் சமாதியை சுற்றிலும் சோதனைகள் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement