பெருமாள் கோயில் நந்தவனத்தில் 200 செடிகள் நடும் விழா
சிங்கம்புணரி, செப்.26:சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பூரணை புஷ்கலை உடனான சேவகபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள நந்தவனம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்பட்டது. நந்தவனத்தை பராமரிக்கும் விதமாக சேவகப் பெருமாள் ஆண்டார் அறக்கட்டளை சார்பாக பலவகை பூச் செடிகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னால் எம்எல்ஏ அருணகிரி தலைமை வகித்தார். தேவஸ்தான மேலாளர் இளங்கோ கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை தலைவர் லட்சுமி பிரியா ஜெயந்தன் வரவேற்றார். இதில் 200க்கும் மேற்பட்ட பூச்செடிகள் உள்ளிட்ட பல வகை செடிகள் நடப்பட்டது. இதில் எஸ்.எஸ் கல்வி குழுமம் செந்தில், சந்திரசேகர், குகன் மருத்துவர் அருள்மணி நாகராஜன், அயலக அணி துணை அமைப்பாளர் புகழேந்தி, ஒன்றிய இளைஞரணி மனோகரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.