வேதாளை அருகே சிறப்பு முகாமில் குவிந்த மனுக்கள்
மண்டபம்,செப்.25: மண்டபம் அருகே வேதாளை, மரைக்காயர் பட்டிணம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். மண்டபம் வேதாளை மற்றும் மறைக்காயர்பட்டிணம் ஊராட்சி பகுதிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் வேதாளை அருகே இடையர் வலசை பகுதியில் நடைபெற்றது. முகாமினை மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சோமசுந்தரம் துவக்கி வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சிகள் ஜெயமுருகன் மேற்பார்வையில் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் மகளிர் உதவித்தொகை, ஆதார் பெயர் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நிலத்திற்கான பட்டா மாறுதல், ஊராட்சி வரிகளில் பெயர் மாற்றம் செய்தல் என 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் ஊராட்சி செயலர் நாகேந்திரன் உள்பட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும், அலுவலர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.