மண்டபத்தில் மீனவர் தற்கொலை
மண்டபம்,செப்.25: மண்டபம் பேரூராட்சி பூங்கா அருகே காளியம்மன் கோவிலுக்கு எதிரே காட்டுக்குள் மரத்தில் ஒருவர் தூக்கிலிட்டு கிடப்பதாக மண்டபம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. போலீசார் சென்று உடலை மீட்டு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
பின்னர் இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பாம்பன் புயல் காப்பகம் பகுதியில் அன்னை தெரசா நகர் வசித்து வரும் யாகுலம் மகன் பிச்சை(48) எனவும், மீன்பிடித் தொழில் செய்து வருவது தெரிய வந்தது. பிச்சை மனைவி பிருந்தா அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement