பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு சிறை
சிவகங்கை, செப்.18: காரைக்குடி வைரவபுரத்தை சேர்ந்தவர் பாண்டி(38). டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த ஜனவரி மாதம் கல்லலில் ஒரு வீட்டில் டைல்ஸ் ஒட்ட சென்றிருந்தார். அந்த வீட்டின் அறையில் 17வயது சிறுமி ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். பாண்டி அறைக்குள் சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தேவகோட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன், குற்றம் சாட்டப்பட்ட பாண்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement