பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
தொண்டி, செப்.18: தொண்டி உந்தி பூத்த பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி முதல் நாள் மற்றும் சர்வ ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதினாலும், புரட்டாசி முதல் நாள் மற்றும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொண்டி தேவி, பூதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி முதல் நாள் மற்றும் சர்வ ஏகாதசியை முன்னிட்டு உற்சவருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உட்பட 12 வகை அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்தார்.
Advertisement
Advertisement