அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு வருட தொழிற்பயிற்சி விண்ணப்பிக்க நாளை கடைசி
சிவகங்கை, அக். 17: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஒரு வருட தொழிற்பயிற்சி பெற நாளைக்குள்(அக்.18) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப) லிட், கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம்(தென் மண்டலம்) இணைந்து நடத்தவுள்ள ஒரு வருட தொழிற் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://nats.education.gov.in என்ற இணையதளத்தில் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட இணையதளத்தின் மூலம் அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். இத்தொழிற்பயிற்சி பெற பொறியியல் பட்டம்(குறிப்பிட்ட), பட்டயபடிப்பு (இயந்திரவியல், தானியங்கிவியல்) மற்றும் பொறியியல் அல்லாத கலை, அறிவியில், வணிக பட்டதாரிகள் 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.