மீனவர் விழிப்புணர்வு கூட்டம்
தொண்டி, அக். 17: தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் மீன்வளத் துறையினர் சார்பாக அவசர கால பொறுப்பு சார்ந்த பயிற்சி மற்றும் முன்கள பணியாளர்கள் பயிற்சிக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மீன்வளத்துறை துணை இயக்குனர் கோபிநாத் தலைமை வகித்தார்.மீன்வள உதவி இயக்குனர் ராஜேந்திரன், மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹீர் முன்னிலை வகித்தனர். கடலில் ஆபத்தின்போது நடந்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து பேசினர். ஆர்.ஐ. மேகமலை, விஏஓ ராஜேஸ், தொண்டி போலீசார் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். கடலில் தத்தளித்த காரங்காடு மீனவரை காப்பாற்றிய நம்புதாளை மீனவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement