ராமேஸ்வரம்-குஜராத் இடையே புதிய ரயில் இயக்க கோரிக்கை
மானாமதுரை, நவ. 15: குஜராத் மாநிலத்தில் தமிழர்கள் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வாழ்கின்றனர். குஜராத்தின் அகமதாபாத், சூரத், மணிநகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் அங்கு குடியேறி உள்ளனர். இவர்கள் தென்மாவட்டங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு தீபாவளி, ெபாங்கல் பண்டிகை, கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு இரண்டு மூன்று ரயில்களில் மாறி வரவேண்டியுள்ளது.
எனவே ராமேஸ்வரம், மதுரை, திண்டுக்கல் வழியாக குஜராத் மாநிலம் காந்திதாம் நகருக்கு புதிய ரயிைல இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, சோரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மங்களுர், வசாய் ரோடு(மும்பை புறநகர்), மட்கான்(கோவா), பன்வல் (புது மும்பை), வாபி, சூரத், வடோதரா (பரோடா), அகமதாபாத், காந்திதாம் நகருக்கு புதிய ரயில் சேவையை துவக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.