சேமிப்பு கிடங்கு அமைக்க கட்டிட பணிகள் துவக்கம்
பரமக்குடி,செப்.15:பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கமுதக்குடியில் உள்ள தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகத்தில், கூடுதல் சேமிப்பு கிடங்கு, சாலை மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
பரமக்குடி சட்டமன்ற தொகுதி கமுதக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகத்தின் கூடுதல் கிடங்கு வளாகத்தில், 750 மெட்ரிக் டன் கூடுதல் சேமிப்பு கிடங்கு, கான்கீரிட் சாலை மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, குணசேகரன், பரமக்குடி வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மோகன், மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டின், பரமக்குடி தெற்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளர் துரைமுருகன், பரமக்குடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அந்தோணி தாஸ் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.