திருவாடானையில் நாளை மின் நிறுத்தம்
திருவாடானை, செப்.15: திருவாடானை மற்றும் நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிக்கு மின்சாரம் இருக்காது. மின்தடை பகுதிகள்: திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூர், எட்டுகுடி, மல்லனூர், ஆண்டாஊரணி, ஓரியூர், சிறுகம்பையூர், அரசூர், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூர், திருவிடைமதியூர் பதனக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்தடை ஏற்படும் என ராமநாதபுரம் செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement