இன்று டாஸ்மாக் விடுமுறை
12:52 AM Aug 15, 2025 IST
சிவகங்கை, ஆக. 15: சிவகங்கை கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கும். மேலும் மதுக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள், லைசென்ஸ் பெற்ற மதுபானக்கூடங்கள், ஹோட்டல்கள் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுபானக்கூடங்கள் இன்று ஒரு நாள் மட்டும் மூடப்பட்டிருக்கும்.