பிரதமரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காரைக்குடி, ஆக, 14: காரைக்குடியில் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் மீனா சேதுராமன், உள்ளாட்சி மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் சகாயம், மாவட்ட துணை செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் மணவழகன், அரசு போக்குவரத்து கழக மண்டல பொதுச்செயலாளர் விஜயசுந்தரம், கிளை செயலாளர் முருகேசன், தூய்மை பணியாளர் சங்க மாநகர் செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் கருப்பையா, அமானுல்லா, மாநகரகுழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, ரமேஷ், லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தியா,அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையை ரத்து செய்ய வேண்டும். இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை உயர்த்திய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காத பிரதமர் மோடியை கண்டிக்கிறோம். பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். தொழிலாளர் சட்டம் 44ஐ திருத்தம் செய்து 4 சட்ட தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.