நூலகர் தின கொண்டாட்டம்
சிவகங்கை, ஆக. 13: சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் இந்திய நூலகத்துறையின் தந்தையாக போற்றப்படும் சீர்காழி ராமாமிர்த ரெங்ககாதனின் 133வது பிறந்த தினத்தினை நூலகர் தினமாக கொண்டாடப்பட்டது. இவர் நூலகப் பகுப்பாய்வு முறையை கொண்டு வந்ததின் விளைவாக, நூலகத்தந்தை என போற்றப்படுகிறார். மாவட்ட மைய நூலகர் வெங்கடவேல் பாண்டி, தலைமை வகித்து நூலகத் தந்தையின் உருவப்படத்திற்கு மாலை அனுவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் தமிழ் செம்மல் பகிரத நாச்சியப்பன், நூல் இருப்பு சரிபாப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், நூலகர்கள் மற்றும் உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.