விதிமீறி மீன் பிடிப்பு மீனவர்களிடம் விசாரணை
தொண்டி, ஆக.13: தொண்டி கடல் பகுதியில் மரைன் போலீசார் ரோந்து சென்ற போது அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடித்த மீனவர்களிடம் விசாரித்து வருகின்றனர். அதிக ஒளி பாய்ச்சி விளக்கு வைத்து மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு தொண்டி மீன்வளத் துறை ஆய்வாளர் அபுதாஹிர், எஸ்ஐ அய்யனார், குருநாதன் உள்ளிட்ட போலீசார் கடலில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட விளக்குகளை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர். இதையடுத்து படகில் இருந்த லைட் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்து தேவிபட்டினம் மரைன் போலீஸ் ஸ்டேசனில் வைத்து மீனவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.