மாரியம்மன் ஆலய திருவிழா
தொண்டி, ஆக.13: தொண்டி அருகே கடம்பனேந்தல் கிராமத்தில் செல்வ விநாயகர், முத்து மாரியம்மன் கோயில் 30ம் ஆண்டு ஆடி பால்குட உற்சவ விழா நடைபெற்றது. கடந்த 5ம் தேதி காப்பு கட்டப்பட்டது. நேற்று பக்தர்கள் கரகம், பால்காவடி, வேல் காவடி, தீசட்டி உள்ளிட்ட காவடி எடுத்து பூக்குழி இறங்கினர். அன்னதானம் நடைபெற்றது. கிராம மக்கள் கோயிலின் முன்பு பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு இதில் கடம்பனேந்தல் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை கிராமத்தார்கள் செய்து இருந்தனர்.