பொதுக்குழு கூட்டம்
திருப்புத்தூர், ஆக.11: திருப்புத்தூரில் வர்த்தக சங்ரத்தின் 50ம் ஆண்டு பொன்விழா பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் அந்தோனிராஜ் தலைமை வகித்தார். செயலாளர் அப்துல்காதர் முன்னிலை வகித்தார். கூடுதல் துணைத் தலைவர்கள் பிச்சைமுகமது, நாகராஜன், உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
Advertisement
மேலும் மருதுபாண்டியர் அரசு மருததுவமனைக்கு நவீன மருத்துவ வசதிகளை அதிகரித்தும், கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்துவது சம்மந்தாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும், தொண்டியில் இருந்து திருப்புத்தூர் வழியாக மதுரைக்கு ரயில் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Advertisement