சமஸ்தான கோயில்கள் புனரமைப்பு முதல்வரிடம் கோரிக்கை
ராமநாதபுரம், ஆக. 9: சென்னையில் நேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலினை, ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தான ராணி பிரம்மகிருஷ்ணா ராஜராஜேஸ்வரி நாச்சியார் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இது குறித்து சேதுபதி சமஸ்தானம் நிர்வாகத்தினர் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலம் பெற்று வந்துள்ளார். அவரின் உடல் நலம் குறித்து விசாரிக்கப்பட்டது. ராணி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார், சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருஉத்தரகோச மங்கை மங்களநாதர்கோயில் உள்ளிட்ட 45 பழமையான பெரிய கோயில்கள், 75 உபகோயில்ளை நிர்வகித்து வருகிறார். பழமையான கோயில்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் சமஸ்தான கோயில்களை புனரமைப்பு செய்ய அரசு உதவி செய்திட வேண்டும். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தக்கார் பொறுப்பு வழங்கிட வேண்டும். ராமநாதபுரம் நகரில் உள்ள ராஜா பள்ளிகளில் கூடுதல் வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார் என்றனர்.