கால்நடை மருத்துவமனை வேண்டும் நம்புதாளை மக்கள் கோரிக்கை
தொண்டி, நவ.7: தொண்டி அருகே நம்புதாளையில் கால்நடை மருத்துவமனை துவங்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை வட்டாரத்தில் நம்புதாளை அதிக மக்கள் தொகை உள்ள பெரிய ஊராட்சியாகும். இங்கு பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. அதனால் அனைத்து விவசாயி வீட்டிலும் ஆடு, மாடு, கோழி வளர்க்கின்றனர். நம்புதாளை மட்டுமின்றி அருகில் உள்ள முகிழ்த்தகம், சோலியக்குடி, சம்பை, கடம்பனேந்தல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலும் அதிகமாக கால்நடை வளர்க்கின்றனர். இந்த கால்நடைகளுக்காக தொண்டியில் இருந்த மருத்துவமனை பெருமானேந்தல் கிராமத்திற்கு மாற்றப்பட்டது. இது கடும் சிரமத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. அதனால் நம்புதாளையில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மனிதநேய மக்கள் கட்சி பெரியசாமி கூறியது, நம்புதாளையை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அனைத்து பகுதியிலும் ஆடு, மாடு,கோழி அதிகம் உள்ளது. இவைகளுக்கு நோய் வந்தால் சிகிச்சை அளிக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந்த சிரமத்தால் ஆடு, மாடு, கோழி உயிர் பலி ஏற்படுகிறது. அதனால் நம்புதாளையில் கால்நடை மருத்துவமனை துவங்க வேண்டும் என்றார்.