கடல் வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்
மண்டபம், அக்.7: அரியமான் கடற்கரையில் வனத்துறை சார்பில், வன உயிரின பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
மண்டபம் ஒன்றியம், சாத்தக்கோன் ஊராட்சியில் அமைந்துள்ள அரியமான் கடற்கரையில் வனத்துறை சார்பில் வன உயிரின பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. வனச்சரக அலுவலர் செல்வம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கடல் வளத்தைப் பாதுகாக்கவும், கடலில் வாழும் கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பசு உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், 7 ஆண்டுகள் சிறைத் தண்டணை வழங்கும் வகையில் சட்டம் உள்ளது என்பதை பொதுமக்கள், மீனவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வனவர்கள் வெற்றிச்செல்வம், சிவசுப்பிரமணியன், அசோக், வனக்காப்பாளர்கள், வன பாதுகாப்பு விழிப்புணர்வு குழு தலைவர் எம்.பி.எம். முருகன் மற்றும் சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.