நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது
திருப்புவனம், செப். 30: திருப்புவனம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்புவனம் அருகே பழையனூர் காவல் நிலைய எஸ்.ஐ ராஜாமணி தலைமையிலான போலீசார் வயல்சேரி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Advertisement
அப்போது, அப்பகுதியில் இருவர் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். போலீசார் விசாரித்ததில், அவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தேத்தாம்பட்டியைச் சேர்ந்த மதுரைவீரன் (42), தர்மராஜ் (31) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement