ராமநாதபுரம் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்
Advertisement
ராமநாதபுரம், அக்.29: ராமநாதபுரம் அருகே பெருவயல் ரெணபலி முருகன், குண்டுகரை முருகன் கோயில்களில் சஷ்டி விழாவை முன்னிட்டு அரோகர கோஷத்துடன் சூரசம்ஹாரமும், நேற்று திருக்கல்யாணம் நடந்தது. கந்தசஷ்டி விழா கடந்த அக்.22ம் தேதி துவங்கியது, 27ம் தேதி சூரசம்ஹாரம், நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற முருகன் கோயில்களில் அக்.22ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் கோயிலான தேவிப்பட்டிணம் அருகே பெருவயல் சிவசுப்ரமணியர் என்ற ரெணபலி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள், உள்பிரகார உலா நடந்தது.
Advertisement