தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

ராமநாதபுரம்,நவ.28: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களாக இடைவிடாமல் சிறு தூரல் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக் கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது. அது தமிழ்நாட்டை நோக்கி நகர்வதால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் மன்னார் வளைகுடா கடல் மாவட்டமான ராமநாதபுரத்தில் பரவலான பகுதிகளில் நேற்று முன்தினம் காலை தொடங்கி நேற்று இரவு வரை தொடர்ந்து சிறு மழை பெய்து வருகிறது. 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 542.10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்யும் சிறுமழையால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம், கடைவீதிகள் போன்ற பொது இடங்கள் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி, வாலிநோக்கம், மூக்கையூர்,மாரியூர், நரிப்பையூர், ரோச்மாநகர் கடல் பகுதிகள் எப்போதும் பேரலை இருப்பது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அலைகள் இன்றி அமைதியாக உள்ளது. தொடர் மழையின் காரணமாக நேற்று ஒரு நாள் மட்டும், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதுபோல் சிவகங்கை மாவட்டத்தில் புயலால் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று பகல் முழுவதும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. கன மழை இல்லாமல் விடாமல் பெய்யும் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அதிகாலையிலேயே பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் அஷாஅஜித் உத்தரவிட்டார். கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக காளையார்கோவிலில் 22.6மி.மீ, காரைக்குடியில் 21மி.மீ, தேவகோட்டையில் 19.6மி.மீ, திருப்புவனத்தில் 18.4மி.மீ, சிங்கம்புணரியில் 15.2மி.மீ, திருப்பத்தூரில் 14மி.மீ, சிவகங்கையில் 13.6 மி.மீ, இளையான்குடியில் 13மி.மீ, மானாமதுரையில் 12மி.மீ மழை பதிவானது.

பொதுமக்கள் கூறியதாவது: ‘‘கன மழை இல்லாமல் தொடர்ந்து பெய்யும் சாரல் மழையால், வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் மற்ற பணிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது என்றனர்.

Advertisement