குறுவட்ட விளையாட்டுப் போட்டி
Advertisement
காளையார்கோவில், ஆக. 19: இளையான்குடி குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி சகாயராணி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில்ல பொட்டகவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் கேரம் போட்டியில் வெற்றி பெற்றனர். 11 வயது பிரிவில் சஞ்ஜீவி சக்தியன் முதலிடம், யாஷினிகா முதலிடம், ஹரிஷ் 2 இடம் பிடித்தனர். வயது 14 பிரிவில் கிஷோர் சக்தி 3ம் இடம் ,நிஷா 2ம் இடம் பிடித்தனர். 14 வயது கேரம் மாணவிகளுக்கான (ஒற்றையர்) போட்டியில் அஷ்விதா முதலிடம் பெற்றார். மாணவிகளுக்கான (இரட்டையர் போட்டியில்) அஷ்விதா மற்றும் நிதி முதலிடம் பெற்றனர். மாணவர்களுக்கான (இரட்டையர் போட்டியில்) வெற்றிவேல் மற்றும் கபிலேஷ் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவரும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
Advertisement