தேவகோட்டையில் ரத்த கையெழுத்து இயக்கம்
Advertisement
தேவகோட்டை, டிச. 6: தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் மாவட்டத் தலைவர் சேவுகமூர்த்தி தலைமையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வட்டத் தலைவர் கோபி, வட்டார செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரப் பொருளாளர் ஜசூரியா நன்றி தெரிவித்தார்.இதில் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement