இந்து சமய அறநிலையத்துறை சார்பில்ராமேஸ்வரம் - காசி ஆன்மிக பயணம் துவக்கம்
Advertisement
ராமேஸ்வரம், டிச. 6: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஆன்மிகம் சார்ந்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றான இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அழைத்துச்செல்லப்படும் ராமேஸ்வரம் - காசி ஆன்மிக பயணம் ஆகும்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த இந்து பக்தர்கள் மட்டும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசியில் உள்ள விஸ்வநாதர் சுவாமி கோயிலுக்கு ஆன்மிகப் பயணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக அழைத்துச் செல்லப்படுகிறனர். இதற்கான செலவினத் தொகையை அரசே ஏற்கிறது. ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு பக்தர்களை அழைத்து செல்ல ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Advertisement