அம்மன் கோயில் திருவிழா தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள்
பரமக்குடி,ஆக.5: ஆடி மாதா திருவிழாவையொட்டி மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சதுரங்க நாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சதுரங்க நாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா ஜூலை 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட பெருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. சுமார் 300க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று இரவு பூக்குழி இறங்குதல் வைபவம் நடைபெற்றத. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை மேலப்பெருங்கரை கிராம மக்கள் செய்திருந்தனர்.