பெயிண்டருக்கு கத்திக்குத்து மூன்று பேர் கைது
தொண்டி, ஆக.5:தொண்டி அருகே டூவீலரில் சென்றவரை வழி மறித்து கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தாஸ்(43). பெயிண்டர். இவர், நேற்று புடனவயலுக்கு சென்று விட்டு தொண்டி நோக்கி டூவீலரில் செல்லும் போது புதுக்குடி விலக்கு ரோட்டில் வழிமறித்து கத்தியால் குத்தி கம்பால் தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த தாஸ், திருவாடானை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தொண்டி போலீசார் விளக்கனேந்தலை சேர்ந்த செந்தில்கனி மாதவன்(35), கண்மாய் கரை குடியிருப்பு கெளதம்(34), பண்ண வயலை சேர்ந்த ரெத்தினம்(40) ஆகிய மூவரையும் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததாக விசாரனையில் தெரிய வந்துள்ளது.