மகளிர் அதிகார மையத்தில் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம், ஆக.4: ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது. ராமநாதபுரம் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட மகளிர் அதிகார மையம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொழில் நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி. கணினி ஐடி பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம், வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும், சம்பளம் ரூ.20,000 ஆகும்.
முன் அனுபவம் அரசு அல்லது அரசு சாரா தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மாநில அல்லது மாவட்ட அளவில் தரவு மேலாண்மை செயல்முறை ஆவணங்கள் அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
ஆர்வமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுயவிபரங்களை 13.8.2025 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், கருவூல கட்டிடம், முதல் தளம், அஞ்சல்துறை அலுவலகம் எதிர்புறம்;, ராமநாதபுரம்-623 503, தொலைப்பேசி எண் : 04567-230466, 91500 57588 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைத்து பயன்பெறுமாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.