ஆண் சடலம் மீட்பு
Advertisement
ராமேஸ்வரம்,டிச.3: மழை நீரில் மூன்று நாட்களாக மூழ்கிக் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் அன்னை நகர் பகுதியில் தேங்கி கிடக்கும் மழை நீருக்குள் ஆண் சடலமாக கிடப்பதாக பாம்பன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து அங்கு சென்ற போலீசார், அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீரில் மூன்று நாட்களுக்கு முன்பு விழுந்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
Advertisement