பரமக்குடி சிறப்பு முகாமில் மனுக்களை பெற்ற எம்எல்ஏ
பரமக்குடி, செப்.3: தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டம், மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய போன்ற பல கோரிக்கைகளுக்கு அலுவலர்கள் நேரடியாக இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து செய்து முடிக்கின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் பரமக்குடி மேற்கு ஒன்றியம் தெளிச்சத்தநல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது. இதில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் பார்வையிட்டு பொதுவக்குடி, கமுதக்குடி தெளிச்சத்தநல்லூர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார். இந்நிகழ்வில் வட்டாட்சியர் வரதன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராமலிங்கம், பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி சேதுபதி, முன்னாள் ஊராட்சி தலைவர் மோகன் மற்றும் மலைச்சாமி, ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஹரிகிருஷ்ணன் மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.