தொண்டி அருகே வாகனம் மோதி ஒருவர் பலி
தொண்டி, ஆக.3: தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாதவாகனம் மோதி பலியானார். பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி வீரசங்கிலி மடம் அருகே நேற்று அதிகாலை ரோட்டில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலையே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த தொண்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவாடானை அனுப்பி வைத்தனர்.முதல் கட்ட விசாரனையில் விபத்தில் பலியானது தூத்துகுடி மாவட்டம். பக்திபுரத்தை சேர்ந்த சுரேஷ்(50) என்பதும், இவர் இப்பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்ததாக தெரிய வந்துள்ளது.