மழைநீர் வடிகால் பணி காரணமாக ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழிப்பாதையாக மாற்றம்
சென்னை: டிடிகே சாலையில் ஆழ்வார்பேட்டை சிக்னல் மான் னிவாசா சாலை வரை 230 மீட்டர் வரை பழுதடைந்த மழைநீர் வடிகாலை சீரமைக்கும் பணி நடைபெற இருப்பதால், இன்று முதல் ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
அதன் விவரம் வருமாறு:
* டிடிகே சாலையில் மியூசிக் அகடாமி நோக்கி வரும் மாநகர பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை ேமம்பால சர்வீஸ் சாலையை பயன்படுத்தி ஆழ்வார்பேட்டை சந்திப்பில் இடதுபுறம் திருப்பி முர்வேஸ் கேட் சாலை வழியாக சென்று வலதுபுறம் திருப்பி சேஷாத்ரி சாலை மற்றும் கஸ்தூரி ரங்கன் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* டிடிகே சாலையில் இருந்து மயிலாப்பூர் நோக்கி வரும் மாநகர பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலையை பயன்படுத்தி ஆழ்வார்பேட்டை சந்திப்பில் வலதுபுறம் திருப்பி லஸ் சர்ச் சாலை மற்றும் முசிறி சுப்பிரமணியன் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக சென்று வழக்கம் போல் தங்கள் இலக்கை அடையலாம்.
* டிடிகே சாலையில் இருந்து ஆழ்வார்பேட்டை நோக்கி மாநகர பேருந்துகள் கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்திற்கு பதிலாக சர்வீஸ் சாலையை பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம், என போலீசார் தெரிவித்துள்ளனர்