ஆர்.எம்.கே. கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்
Advertisement
இதனை தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, மாதவரம், பூந்தமல்லி, ஆவடி, திருத்தணி, அம்பத்தூர், தாம்பரம், மதுரவாயில், போரூர் பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வாலிபால், நீச்சல் போட்டி, பேஸ்கெட் பால், புட்பால், டென்னிஸ் ஆகிய பல்வேறு போட்டியில் பங்கேற்றனர். இதற்கு முன்னதாக, கடந்த வாரம் கல்லூரி வளாகத்தில் வாலிபால் விளையாட்டு போட்டியை ஆர்.எம்.கே கல்வி குழுமத்தின் செயலாளர் ஸ்ரீ யளமஞ்சி பிரதீப் தொடங்கி வைத்தார். பின்னர் ஆர்.எம்.கே. வளாகத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டன.
Advertisement