பொன்னமராவதியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்
பொன்னமராவதி,செப்.16: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் நாள் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டுவருகின்றது. இதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். கட்டுமான பொறியாளர் சங்கத்தின் மண்டல செயலாளர் நாகராஜன், செயலாளர் சங்கர் கணேஷ், பொருளாளர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் விஸ்வேஸ்வரய்யாவின் திருவுருவப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்ககப்பட்டது. இதில் மூத்த பொறியாளர் மனோகரன், பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், நாகராஜ், செந்தில், ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.