மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்க வேண்டும்
புதுக்கோட்டை,செப். 15: மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்க ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சரும். தெற்கு மாவட்ட செயலாளருமான ரகுபதி தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கரூரில் நடைபெறும் கழக முப்பெரும் விழாவில் திரளானோர் பங்கேற்பது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை மீண்டும் முதல்வராக வெற்றி பெறவைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் உள்ளிட்ட தீர்மாdங்கள் நிறைவேற்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட துணை செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், மாநில மாவட்ட மாநகர நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.