கறம்பக்குடி அருகே தார்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Advertisement
கறம்பக்குடி, செப். 15: கறம்பக்குடி அருகே மைலன் கோன் பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் மைலன் கோன் பட்டி கிராமத்திற்கு மருதன்கோன் விடுதி அருகே உள்ள வாழகுட்டையான் தோப்பு கிராமத்தில் உள்ள விளக்கு சாலையிலிருந்து சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டு குழியுமாக காணப்படுகிறது. விபத்துகள் அதிகம் ஏற்படக்கூடிய அளவிற்கு சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. எனவே மைலன் கோன் பட்டி கிராம மக்களின் நலன் கருதி பழுதடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படும் தார் சாலையை உடனடியாக சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Advertisement