இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து தோல் நோய் மருத்துவ முகாம்
அறந்தாங்கி, அக். 14: இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து நடைபெற்ற தோல் நோய் மருத்துவ முகாமில் 250 பயனாளிகள் பங்கேற்றனர்.
காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் முழுமையாக வெளியேற வலியுறுத்தி அறந்தாங்கியில் தோல் நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது.
அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பாக காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் முழுமையாக வெளியேற வலியுறுத்தி இலவச தோல் நோய் மருத்துவ முகாமில் தோல்நோய் மற்றும் அழகு கலை மருத்துவர் தெட்சிணாமூர்த்தி மருத்துவ பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். 250 பயனாளிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிகிச்சை வழங்கி மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. முகாமில் தமிழ்ச்செல்வன் அறந்தாங்கி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பீர் சேக், முபாரக் அலி, அஜ்மீர், அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி தலைவர் தீன், கான் அப்துல் கபர்கான், சற்குருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் பொருளாளர் முபாரக் வரவேற்றார். திசைகள் ஒருங்கிணைப்பாளர் மாடசாமி நன்றி கூறினார்.