பொதுமக்கள் கோரிக்கை பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது
Advertisement
பொன்னமராவதி, அக்14: பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டிஅரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பார்த்தசாரதிக்கு புதுவையில் நடைபெற்ற 5ம் ஆண்டு ஆசிரியர் தின விழாவில் புதுவை தமிழ்சங்கம், ரெக்கார்டு ஹோல்டர் போரம் அமைப்பும் இணைந்து சிறந்த ஆசிரியர்விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றுள்ள தலைமையாசிரியர்பாரத்தசாரதிக்கு பள்ளியின் பெற்றோர்ஆசிரியர்கழகம், பள்ளி மேலாண்மைக்குழு,பொன்னமராவதி முத்தமிழ்பாசறை நிர்வாகிகள், பொன்னமராவதி சேவை சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Advertisement