அன்னவாசல் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனியப்பன் மூத்த நிர்வாகிகளிடம் வாழ்த்து
Advertisement
விராலிமலை, அக். 10:அன்னவாசல் ஒன்றியம் தெற்கு, வடக்கு என்று இருந்த நிலையில் கட்சி அமைப்பை வலுப்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் திமுக தலைமை கழகம் நான்கு ஒன்றியமாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளராக சந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளராக மாரிமுத்து தொடர்கின்றனர். மேற்கு புதிய ஒன்றிய செயலாளர்களாக பழனியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளராக கோவிந்தராஜ் ஆகியோர் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதையடுத்து அன்னவாசல் மேற்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பழனியப்பன் நேற்று தென்னலூர், ராப்பூசல்,கட்டக்குடி, வெள்ளாஞ்சார், புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, கோத்திராபட்டி, ஈஸ்வரன்கோயில், கீழக்குறிச்சி உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் திமுக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Advertisement