இலுப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின் நிறுத்தம்
இலுப்பூர்,நவ.11: இலுப்பூர் மற்றும் இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி துணை மின் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்ள உள்ளதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று 11 தேதி மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மான கழக இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது. இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான புங்கினிப்பட்டி, இருந்திராபட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, மலம்பட்டி
கல்லுப்பட்டி, ஆலங்குடி, சித்தாம்பூர், இராப்பூசல், லெக்கனாப்பட்டி, மற்றும் பையூர் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது. இதேபோல் இலுப்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான இலுப்பூர். ஆலத்தூர், பேயால், கிளிக்குடி, எண்ணை, தளிஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு மலைக்குடிப்பட்டி, மற்றும் கொடும்பாளுர் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது. என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.