சுவாமி நகர் பகுதியில் சாலை சீரமைக்க கோரிக்கை
அறந்தாங்கி, நவ.11: அறந்தாங்கி சுவாமி நகர்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து பொதுமக்கள் பிரச்சாரம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரெத்தினகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சுவாமி நகர் பகுதி சாலை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்லவும் பொதுமக்கள் நடந்து செல்லவும் முடியா நிலேயில் உள்ளது. பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து கொடுக்காததைத் கண்டித்து நேற்று பிரச்சாரம். நடைபெற்றது.இந்த பிரச்சாரத்திற்கு சிபிஎம் நகரச் செயலாளர் அலாவுதீன் சிஐடியூ ஒருங்கினைப்பாளர் கர்ணா ஆகியோர் உரையாற்றினார்கள். அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலை சுவாமி நகருக்கு சாலை அமைத்து தரக்கோரியும், குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வலியுத்தி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிவர்மன் கண்டன உரையாற்றினார் .இந்த பிரச்சார கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் தங்கராஜ், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், மற்றும் சுவாமி நகர் பகுதி பொதுக்கள் பலர் கலந்து கொண்டனர்.