பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம்
பொன்னமராவதி, ஆக. 30: பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. பொன்னமராவதி அருகே உள்ள கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டுத் தினத்த்தை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார்.
வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் முகமது இப்ராஹிம் மூசா வரவேற்றார். கல்லூரி முதல்வர் பழனியப்பன் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும் அதன் பயன்பாடுகள் பற்றியும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார். இதில் கைப்பந்து, கபாடி, பந்து வீச்சு, எரிபந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. விளையாட்டு விழாவினை ஒருங்கிணைத்து உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமாரர் ஆங்கிலத்துறை பேராசிரியர் குழந்தைவேலு, அனைத்து துறை தலைவர்களுக்கும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.