மதிமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் நியமனம்
பொன்னமராவதி, நவ.22: மதிமுகவின் மாநில இளைஞரணி துணைச்செயலாளராக பொன்னமராவதி பிரின்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கொப்பனாபட்டியைச் சேர்ந்த பிரின்ஸ் என்ற இளவரசன் மதிமுக வின் மாநில இளைஞரணி துணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கட்சித்தலைமை அறிவித்துள்ளது.
Advertisement
மாநில இளைஞரணி துணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரின்ஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துரைவைகோ எம்பி ஆகியோரை சந்தித்து வாழ்த்துபெற்றார். இவருக்கு கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள்வாழ்த்து தெரிவித்தனர்.
Advertisement