தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தில் தலைவர் ஆய்வு
புதுக்கோட்டை,ஆக. 22: தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தில் அதன் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி இன்று ஆய்வு செய்கிறார் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தில் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி இன்று (22ம் தேதி) ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
மாலை 3 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்விஉதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, இறப்பு மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு நகர்புறவாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு ஆணைகளை வழங்க உள்ளார். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.