கறம்பக்குடி அருகே பழுதடைந்த பள்ளி ஓட்டு கட்டிடத்தை இடிக்க வேண்டும்
கறம்பக்குடி, நவ. 21: கறம்பக்குடி அருகே பழுதடைந்த பள்ளி ஓட்டு கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மீனம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் முதன் முதலாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப பள்ளி ஆரம்பிக்க பட்டு செயல்பட்டு வந்தது. அதன் பிறகு ஓட்டு கட்டிட பள்ளி மாற்றப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் ஓட்டு பள்ளி கட்டிடம் பழுடைந்து ஆங்காங்கே ஓடுகள் பெயர்ந்து காணப்பட்டது.
அங்கு மீனம்பட்டி ஆரம்ப பள்ளியானது நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த பட்டு அதன் பிறகு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வேறொரு இடத்தில் நடுநிலை பள்ளி முழுவதுமாக செயல்பட்டு வருகிறது. மீனம்பட்டி அங்கன் வாடி அருகே பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக காணப்படும் மீனம்பட்டி அரசு ஆரம்ப தொடக்க பள்ளி பழுதடைந்த ஓட்டு கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி அந்த இடத்தில் வேறொரு புதிய அரசு அலுவலக கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.