புதுக்கோட்டையில் மா.கம்யூ., (லெனினிஸ்ட்) ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, ஆக.21: புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி மார்ச்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கம்யூனிஸ்ட் கட்சி மார்ச்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை கட்சியின் பொது செயலாளர் விடுதலை குமரன் தலைமை வகித்தார்.
Advertisement
ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தூய்மை பணியாளர்களை அரசு ஊழியராக்கி கல்வி தகுதிக்கு ஏற்ற பதவி வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கையை வழியுறுத்தி பேசினர். இதில், நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
Advertisement